
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரபல மரணம் அடைந்துள்ள செய்தி சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பான தொடர் கனா காணும் காலங்கள். இத்தொடரில் பி.டி. ஆசிரியர் கேரக்டரில் நடித்தவர் அன்பழகன்.
இந்தக் கேரக்டரில் நடித்ததன் மூலமும், இதில், அவர் பேசும் எஸ் சார், ஓகே சார், நோ சார் என்ற வசனமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
இதையடுத்து, அவர் ரெட்டைவால், தாயுமானவன், காற்றுக்கென்ன வேலி சீதாராமன், அண்ணா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கண்டிகை என்ற பகுதியைச் சேர்ந்த நடிகர் அன்பழகன். நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.