
சமீபத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்களுக்கு தேவையான உதவிகளையும் நிவாரண உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இதையடுத்து, தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்னர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாடு அரசு நிவாரண உதவிகள் செய்து வருகிறது. இந்த நிலையில், அரசுட இணைந்து தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களும் உதவி செய்து வரும் நிலையில், இன்று நடிகர் விஜய் தமது விஜய் மக்கள் இயக்கம் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
அதன்படி, இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தளபதி விஜய் நெல்லை மாவட்டத்தில் உள்ள மாதா மாளிகைக்கு வந்தடைந்தார்.!

இதுகுறித்து மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,
‘’தூத்துக்குடி மற்றும் நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தளபதி விஜய் அவர்கள் இன்று நெல்லையில் உள்ள மாதா மாளிகையில்,தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, காய்கறிகள், அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, ரவை, சேமியா உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் வேட்டி, சேலைகள் போன்ற வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.! என்று தெரிவித்துள்ளார்.