
கேப்டன் மூவரிடமும் பழகிய விதம் சமமாக…. அதுவே இறுதி ஊர்வலக்கூட்டத்தின் காரணம்” என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக நிறுவனரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதி நிகழ்வு நேற்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற்று அவரது பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், சக நடிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
சிலர் நேரில் வர இயலாமல், வீடியோ மூலம் இரங்கல் கூறினர், சிலர் கடிதம் வெளியிட்டனர்.
இந்த நிலையில், அரசியல் வாழ்விலும், பொதுவாழ்விலும் சினிமாவிலும் எல்லோரையும் சமமாக மதித்தவர் விஜயகாந்த்,. கேப்டன் விஜயகாந்த் பற்றி பிரபல நடிகரும் இயக்குனருமான சேரன் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில்,
”திரைத்துறையில் வெற்றி இருந்தால் முதலிடம் இல்லையேல் கடைசி இடம் கூட நிரந்தரமில்லை… கேப்டனுடன் தம்பி விஜய்,நான்,அமீர் மற்றும் வெங்கட் சார். மூன்று பேரின் வெற்றி உயரங்கள் அந்நேரத்தில் வேறுவேறானவை.. கேப்டன் மூவரிடமும் பழகிய விதம் சமமாக…. அதுவே இறுதி ஊர்வலக்கூட்டத்தின் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.