
கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் எனப்பெயர் வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக நிறுவனரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நேற்று முன்தினம்(28-12-23) காலமானார். அவரது இறுதி நிகழ்வு நேற்று(29-112-23) முழு அரசு மரியாதையுடன் நடைபெற்று அவரது பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், கே.என். நேரு மற்றும் அரசியல் தலைவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், சக நடிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
கேப்டன் விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசுக்கு நன்றி கூறியதுடன், விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று குஊறினார்.கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ”கோயம்பேட்டின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் எனப் பெயரிடப்படும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
இதனால், தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.