
விஜயகாந்த் தன் படங்களில் சண்டைக்காட்சிகளில் டூப் வேண்டாமென மறுத்தது ஏன்? என்பது குறித்து புளூ சட்டை மாறன் தன் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகாந்த். சினிமாவை தாண்டி, அரசியலில் கால்பதித்து, அதில் தடம் பதித்து, ஏழை மக்களுக்கு உதவுவதையே தன் நேர்மையான வாழ்க்கையில் கொள்கையாக கொண்டிருந்தவர். அவர் நேர்மைக்கு, உண்மைக்குமே பல ரசிகர்களும், சினிமாத்துறையினரும் இன்று அவருக்கு உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சினிமா சண்டை காட்சிகளில் அவரை மிஞ்ச ஆளில்லை என்பதற்கேற்க ஒவ்வொரு படத்திலும் டூப் இல்லாமல் ரிஸ்கான சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் பேர் எடுத்தவர் விஜயகாந்த்.
இந்த நிலையில், சண்டைக்காட்சிகளில் டூப் வேண்டாமென மறுத்தது ஏன்? என்பது பற்றி புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
”நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது சண்டைக்காட்சிகளே. பல திரைப்படங்களில் தனக்கு டூப் வேண்டாம் என மறுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் தனெக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார் விஜயகாந்த.
இதற்கு பின்னால் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ‘நாளை உனது நாள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், அவருக்கு டூப் போட்ட ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, இனிமேல் எனக்கான சண்டைக்காட்சிகளில் நானே நடித்துக் கொள்கிறேன், டூப் வேண்டாமென முடிவெடுத்துள்ளார்.
டூப்புக்கு ரெண்டு உசுரா இருக்கு, அவருக்கு ஒரு உசுருதானே. அது போறதா இருந்தால் என்னோடு போகட்டும், நானே ரிஸ்க் எடுக்கிறேன் என தெரிவித்தாராம்.
இதற்காக பிரத்யேக சண்டைப் பயிற்சிகளையும் அவர் எடுத்துள்ளார். தனது பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்ததால், பலமுறை இவருக்கு தோள்பட்டை இறக்கம் ஏற்பட்டுள்ளது – Sampath Kumar, Facebook.
பெரிய மருது படத்தில் பொன்னம்பலத்துடன் விஜயகாந்த் மோதும் அசல் சண்டைக்காட்சி. தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த பொன்னம்பலத்தால் வர இயலவில்லை. தனக்கு பல வாய்ப்புகள் அளித்த கேப்டனின் மறைவு செய்தி கேட்டு பொன்னம்பலம் மிகவும் அழுததாக செய்தி”என்று தெரிவித்துள்ளார்.
#சீவகன்