
விஜயகாந்த் எனும் சகாப்தம்
தமிழ் சினிமாவின் நடிகராக அவதாரம் எடுத்த விஜயகாந்த் எப்படி இத்தனை லட்சம் மக்களின் அபிமானவராக மாறினார்?
ஒரு நடிகர் தன் வளர்ந்து வரும் காலத்திலேயே தன் வாடகைக்குக் குடியிருக்கும் அறையில் சினிமாவில் நடித்துவிட்டு, அழுத்து, சலித்து வரும்போது, தன் அறையில் தன் நண்பர்கள் உறங்கிக் கொண்டிருக்க, விஜயகாந்த் வெராண்டாவில் படுத்து உறக்கியிருக்கிறார் என்று அவரது நண்பர்களே கூறியிருக்கிறார்கள்.
அதேபோல் தி நகர் அதே ரோகிணி லாட்ஜில் தன வாடகைக்குக் குடியிருக்கும்போது, தன் சக நடிகர்கள், நண்பர்கள், பாடலாசிரியர்கள் என பலருக்கும் உணவு கொடுத்து உபசரித்திருக்கிறார்.
நடிக்கும்போது, அவருடன் நடிக்க மாட்டேன் என்று கூறிய கதா நாயகிகளே கூட அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து பல சில்வர் ஜூபிளி படங்களை கொடுத்தபோது, அவருடன் இணைந்து நடித்துள்ளனர்.
ஒருவர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, தன் திறமை மீது, கொண்டிருக்கும் துறையின் மீதான நாட்டத்தினாலும் எத்தனை கஷ்டப்பட்டாலும், எத்தனை கம்பெனிகளிலும் ஏறி, இறங்கினாலும் நிச்சயம் தான் நினைத்த இலக்கை அடையமுடியும், தன் லட்சியத்தையும், கனவையும் தொடமுடியும் என்பதற்கு விஜயகாந்தும் ஒரு உதாரணம்.
தான் ஆரம்ப காலக்கட்டத்திலே தன் சக நண்பர்களின் பசி, பட்டினி ஆற்றிய அதே உள்ளம்தான் பின் நாட்களில் யாரை பார்த்த்தலும் முதல் வார்த்தையே சாப்பிட்டீர்களா என்று கேப்டதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.
போதும் என்று மனதார சொல்வது உணவை சாப்பிடும்போது மட்டும்தான்! அதில், ஏழை எளிய மக்கள் முதற்கொண்டு இன்றைக்கு உள்ள சினிமா நட்சத்திரங்கள் வரை எல்லோருக்கும் அவர் போதும் போதும் என்று சொல்லும்வரை பூரணமாக உணவளித்து மகிழ்ந்திருக்கிறார்.
ஆபாவாணன் இயக்கிய செந்தூரப்பூவே என்ற படத்தில் அவர் விஜயகாந்த் நடித்தபோது, அவர் கேப்டன் செளந்தரபாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.அப்போது, இந்த யூனிட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கேப்டன் என்று அழைத்து வந்தனர். அவரை எல்லோரும் கேப்டன் என்று அழைக்கவே, சினிமாத்துறையிலும் நடிகர் சங்க செயற்பாட்டிலும் அவர் முன்னின்று நடத்தி கேப்டனாக செயல்பட்டாதால் அவர் ஆளுமையைப் பார்த்து அனைவரும் அவரை கேப்டனாக ஏற்றுக் கொண்டனர். கேப்டன் என்ற அடைமொழி விஜயகாந்தின் பெயருக்கு முன் இயல்பாகவே இணைந்துவிட்டது. அது அவருக்குப் பொருத்தமாகவும் ஆகிவிட்டது.
நேற்று அவர் திடீரென்று உடல் நலக்குறைவால் காலமானார். ஆனால், அவரது செயலும், அவரது கம்பீரமும், அவரது ஆளுமையும் சமீப காலத்திய அவரது தோற்றத்தை எந்த வகையிலும் பாதிக்ககவில்லை. அவர் எப்போதும் ரசிகர்களின், தொண்டர்களின் உள்ளத்தில் நிரந்தமாக அதே விஜயகாந்தாக, ஆளுமைமிக்க கேப்டனாகவே காட்சியளிப்பார்.
அவர் சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தபோது அவரை ஆதரிக்காத பலரும் இருபெரும் ஆளுமைகள் மண்ணியில் இருந்து மறைந்தபோதுதாம், விஜயகாந்தின் பெருமையையும், அவரது ஆளுமையையும் மதிக்கத் தொடங்கினர்.
அது அவரது தொண்டர்கள், மற்றும் ரசிகர்களுக்கு என்றும் நினைவிருக்கும். அவர் தான் படிக்காமல் இருந்தாலும் தன் மக்கள் படிக்க வேண்டுமென 600 கம்யூட்டர்களை ஒன்றரைக் கோடியில் வாங்கிக் கொடுத்து அதில் பில் போட கற்றுக்கொண்டு உயர்ந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும என்று உயர்ந்த கொள்கை கொண்டிருந்தார். வறுமை ஒழிப்பு திட்டம் ஒன்றை வைத்து ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வந்தார். அவர் மனிதர்களின் மாமனிதர். நடிகர்களில் ஒரு மாணிக்கம்.
ஏழைகள் நெஞ்சில் இடம்பிடிப்பது அத்தனை எளிதல்ல. இன்றைய முன்னடி நடிகர்களின் ஆரம்பகால படங்களில் எந்த தயக்கமும் இன்றி நடித்து கொடுத்து அவர்களை பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமாக்கிய பெருமை விஜயகாந்தையே சேரும்.
விஜயகாந்த் சினிமாவில் ஹீரோவாக நடித்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் தோன்றி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. தேர்தலில் வெற்றிபெற்று 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பொதுக்கூட்ட மேடைகளில், பிரசாரங்களில் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. மக்கள் உள்ளத்தில் அவர் மக்களின் மீதான ஈரமான இரக்கமும், அவர் செய்த உதவிகளும், அன்னம் ஈட்டிய கைகளும், பாசம் தழுவிய முகமும் இன்னமும் எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கிறது.
இப்படித்தான் இந்த கேப்டன் எல்லோர் மனதிலும் இடம்பிடிக்க காரணம். இன்று ஊரே உலகமே சொல்கிறது கேப்டன் யார் என்று.
அதுவே வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சி.
#சீவகன்