
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவை ரசிகர்களாலும், சினிமாத்துறையினராலும், தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
நேற்றும், இன்றும் விஜயகாந்த் என்ற ஆளுமையைப் பற்றி அனைத்து மீடியாக்களும் செய்திகளை, அவரைப் பற்றி பிரபலங்களின் பேட்டியை ஒலிபரப்பி வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் செனையில் கூடியிருந்தது. போலீஸார் இருந்தபோதிலும் அக்கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த், நடிகர் பிரபுவிடம், ‘’எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். சின்ன கலாட்டா கூட நடக்காது. எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் ‘’என்று கூறியுள்ளார்.

சொன்னப்படியே சிவாஜி கணேசன் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது, ”எந்த பிரச்சனை நடக்காமல் சொன்னதை விஜயகாந்த் செய்தார். அவர் செய்த உதவியை நான் மறக்க மாட்டேன்” என்று நேற்றைய பேட்டியின்போது பிரபு கூறியது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி இறுதி ஊர்வலத்தின்போது,எதற்கும் பயமின்றி, கூட்டத்தை தனியொருவராக, தன் கம்பீரமான உடல் மொழியாலும், குரலாலும் கட்டுப்படுத்திய விஜயாந்த்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
#சீவகன்