
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவு சினிமாவுக்கும், அரசியலுக்கும் பேரிழப்பு என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு, சினிமாத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று இரவு நடிகர் விஜய் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்ணீர் விட்டு அழுத அவர் 10 நொடிகள் விஜயகாந்த் முகத்தை பார்த்து நின்றார்.
அவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தனது கார் நின்ற இடத்திற்கு வந்தபோது, அவர் மீது செருப்பு வீசப்பட்டதாக ஒரு வீடியோ வைரலானது.
இது உண்மையா, வதந்தியா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், இந்த வீடியோயை எடுத்த செய்து நிறுவனம் இது உண்மை என்று விளக்கம் அளித்துள்ளது.
விஜயின் ஆரம்ப காலக்கட்டத்தில், விஜயகாந்த் அவருடன் இணைந்து நடித்து அவரை பிரபலமாக்கிய நிலையில், விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, விஜய் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால், விஜயகாந்த் தரப்பில் இருந்து உரிய அனுமதி கிடைக்காததால்தான் விஜய்யால் அவரை சந்திக்க முடியவில்லை என ஒரு தகவல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.