
தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பாவான்கள் இசைஞானி இளையராஜா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து.
இருவரும் பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் இருந்து முதல் மரியாதை, காதல் ஓவியம், மண்வாசனை, சிந்து பைரவி, புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக பணியாற்றினர்.

அதன்பின்னர், இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
அவர்கள் இருவருக்குமான பிரிவு இன்று வரை பேசப்படுகிறது. இருவரும் இணைந்து பணியாற்றுமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கூட ஒன்றாக கலந்துகொள்வதில்லை. அப்படி கலந்துகொண்டாலும் பேசிக் கொள்வதில்லை.

இந்த நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இப்படம் பாலிவுட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கவுள்ளார் எனவும், இளையராஜாவுடன் பணியாற்றிய வைரமுத்து போன்ற தோற்றமுடையவர் இப்படத்தில் நடிக்கவைக்க முயற்சி நடப்பதாகவும் கூறுகின்றனர்.