
இந்திய மக்கள் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, குவைத், பாரிஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதில் இந்தியர்கள் 3 வது இடத்தில் இருப்பதாக ஒரு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக எல்லை தாண்டி நுழையும் வெளி நாட்டவர்களில் இந்தியர்கள் 3 வது இடத்தில் இருப்பதாக அந்த நாட்டைச் சேர்ந்த pew நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்படி சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை கொரொனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், 7.25 லட்சம் இந்தியர்கள் அங்கு சட்ட விரோதமான முறையில் வாழ்ந்து வருவதாகவும் உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகிறது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு எங்களை பின்தொடரவும், எங்களை தொடர்புகொள்ள, உங்களை கருத்துகளை [email protected] என்ற ஜிமேயில் முகவரியில் தெரிவிக்கலாம்.
எல்லா சோசியல் மீடியாவிலும் cineyukam என்ற இந்த மீடியாவை நீங்கள் பின்தொடலாம்.