
நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நடிகை த்ரிஷா, சக நடிகர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார சிரஞ்சீவவி மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நடிகை குஷ்பு தெரிவித்த நிலையில், நேற்று தேசிய மகளிர் ஆணையம் தாமாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், த்ரிஷா மீதான புகாரின் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேரடியாக அழைத்து விசாரிக்க அவருக்கு 41 ஏ எனப்படும் நோட்டீஸை அனுப்பியுள்ளது சென்னை காவல்துறை.
இந்த விசாரணைக்கு நவம்பர் 23 ஆம் தேதி (நாளை) காலை 10:-00 மணிக்கு அவர் ஆஜராகும்படி கூறியுள்ளனர்.