
தொண்ணூறுளையும் இருபதுளையும் காதல்” அப்படியே தான் இருக்கு.. காதலிக்கான
உவமை மட்டுதான் காலத்துக்கு ஏத்த மாறி மாறிட்டே போகுது..இசையோட பாட்டு கேக்குறப்ப ரெண்டு பாட்டுமே நல்லாதான் இருக்கு..
ஆனாவரிய வச்சு பாக்குறப்ப 90ல எழுதுன வரி தான் ரொம்ப ஆழமா இருக்கு.. சொல்லப்போனா ரெண்டு பாட்டுமே உளவியலோட ஒத்துப்போறது தான்..”
ஒரு பாட்டுல ஆணோட உளவியல் பக்குவம் அடஞ்சிருக்கு..இன்னொரு பாட்டுல ஆணோட உளவியல் குழந்த தனமா இருக்கு..எந்த பாட்டுனு பாத்தா 2017ல வெளி வந்த “மேயாத மான்” படத்துல ஏரியா கானா அவர்களால எழுதுன”கம்மலா நானிருந்தா உன் காதோரம் உரசி இருப்பேன்” அப்டிங்குற வரிதான்… நாம்பலா சின்ன வயசுல ஒருத்தர ரொம்ப பிடிச்சிருந்த அவங்க கூடவே இருக்கனும்னு ரொம்ப ஆசப்படுவோம்..ஒரு கட்டத்துல அவங்க யூஸ் பண்ற பொருள்கள் (பேனா,புத்தகம் )பாத்தா அந்த பேனாவா நம்ப இருந்தா அவுங்க வீட்டுல இருந்துருப்போம்ல னு தோனும்..சின்ன வயசுல
எல்லாருக்கும் இப்படி தோனியிருக்கும்.. நம்ப அத அனுபவிச்சோ அப்படியே கடக்கவும்
செஞ்சுட்டோம்..ஆனா ரசிச்சவங்கனால மட்டும் தான் ஒரு படைப்பா உருவெடுக்குது..

பக்குவமான உளவியலுனு பாத்தா ” 1994ல வெளிவந்த “டூயட்” படத்துல வைரமுத்து அவர்களால எழுதப்பட்ட வெண்ணிலாவின் தேரில் ஏறி பாடல்ல சில வரியான அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாவேன் …இல்லை செந்தாமரை பாதத்திற்கு செருப்பாவேன்” இருக்கு.. இதுல சீப்பு, செருப்பு ரெண்டுமே ஒரு பெண்ணொட சுமைய, சுகமா/ இலேசா மாத்துறதல கைத்தேர்ந்தவங்க..அதுமாறி உன்னோட வாழ்க்கைக்கும் துணையா இருக்கேனு மறைமுகமா வரிகள் சொல்ற மாறி இருக்கு..ரெண்டுமே வேற வேற ரசனை.. ஆனா ரெண்டு பாட்டுலயும் காதல் ஒன்னு தான்.. எந்த மாற்றமும் இல்ல…ரெண்டு பாட்டுலயும் சூழல் தான் வேற… அதனால ரசனை, கருப்பொருள் எல்லா மாறுது…பொருள் ஆழம்னு பாத்தா 90S பாட்டு வரி தான்..பொருளத் தாண்டி
அடடாட இப்படியும் ஒரு நவீன ரசனையானு ஆச்சர்யப்பட வைக்குறது தான் 2K பாட்டு வரி..ஆக மொத்தம் எந்த காலத்துல என்ன வேணுங்குறத பதிவு செய்றதுல திரைப்பட பாடலுக்கும் பெருத்த இடம் இருக்குங்குறதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்ல…
கம்மலா நானிருப்பேன் Song
Movie – meyatha maan
Lyricist – area gana
சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாவேன் Song
Movie : Duet
Lyricist : vairamuthu
Edited By lakshmi
Phd Scholar & Professor
Coimbatore