
ஹாலிவுட் தமிழ் என்று அழைப்படுபவர் தனுஷ். இவர், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட் சினிமாவில் நடித்து தமிழர்களுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
இவரது நடிப்பில் அடுத்து உருவாகி வரும் தமிழ் படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இப்படம் வரும் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், கேப்டன் மில்லர் பட முதல் சிங்கில் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது கேப்டன் மில்லர் பட முதல் சிங்கில் கில்லர் கில்லர் பாடல் தனுஷ் குரலில் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் ஸ்டைலில் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.