
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் ‘’அயலான் ஆகிய படங்களுக்குப் போட்டியாக ரிலீஸாகிறது.
இந்த நிலையில், லைகா நிறுவனம் அறிவித்தபடி, இன்று லால் சலாம் படத்தின் டிரைலர் டீசர் ரிலீஸாகியுள்ளது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தி தீபாவளி பண்டிகையொட்டி தன் ரசிகர்களுக்கு வாழ்த்துகள் கூறி, வரும் பொங்களுக்கு’ லால் சலாம்’ படத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டாரின் லால் சலாம் படமும் வெளியாவதாக அறிவிப்பு வெளியானதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், லால் பட படத்தின் போஸ்ட் புரடக்சன் பணி காரணமாக இப்பட வெளீயீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த நிறுவனம் கூறியுள்ளதாவது: லால் சலாம் படம் திட்டமிட்டபடி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும், இப்பட போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இது இறுதிக் கட்டத்தை நெறுங்கியுள்ளதால் பொங்கலில் உறுதியாக லால் சலாம் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது.
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு எங்களை பின்தொடரவும், எங்களை தொடர்புகொள்ள, உங்களை கருத்துகளை [email protected] என்ற ஜிமேயில் முகவரியில் தெரிவிக்கலாம்.
எல்லா சோசியல் மீடியாவிலும் cineyukam என்ற இந்த மீடியாவை நீங்கள் பின்தொடலாம்.