
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை திரிஷா, சக நடிகர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நடிகை குஷ்பு தெரிவித்த நிலையில், நேற்று தேசிய மகளிர் ஆணையம் தாமாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் ( பவர் ஸ்டார் )சிரஞ்சீவி, திரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசிய கண்டிக்கத்தக்க கருத்துகள் என் கவத்துக்கு வந்தன. இந்த மாதிரியாக கருத்துகள் ஒரு நடிகையை மட்டுமல்ல, மொத்த பெண்களையும் இழிவுபடுத்துவம் வகையில் உள்ளது. அவை வக்கிரம் கொண்டதாக உள்ளது. நான் திரிஷாவுக்கு மட்டுமின்றி, இதுபோன்ற தகாத வார்த்தைகள் எதிர்கொள்ளுகிற அனைத்து பெண்களுக்கும் துணை நிற்பென் என்று கூறியுள்ளார்.
இன்னும் தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் இவ்விவகாரத்தில் குரல் கொடுக்காததது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.