
‘திரிஷா பற்றிய சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை திரிஷா, சக நடிகர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார சிரஞ்சீவவி மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நடிகை குஷ்பு தெரிவித்த நிலையில், நேற்று தேசிய மகளிர் ஆணையம் தாமாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், ‘திரிஷா பற்றிய சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ என்ற பெயரில் அடுத்தவரின் மனம் புண்படும்படி பேசக் கூடாது’ என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.