
உலகக்கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்ற நிலையி, நேற்றைய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா இடையே நடந்தது.
இப்போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா வீரர்கள் திட்டமிட்டு, செயல்பட்டு, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தினர்.
இந்த தோல்வியால், இந்திய வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்கள், உள்ளிட்டோரும் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் ஆஸ்.., வீரர் டேவிட் வார்னர்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். என இந்திய ரசிகர் ஒருவரின் வருத்தமான பதிவிற்கு பதிலளித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.
மேலும், இப்போட்டி மிகச்சிறந்த ஆட்டமாக இருந்தது. இங்குள்ள ரசிகர் சூழல் நம்பமுடியத படி இருந்தது. இந்தியா தீவிரமாக உந்த உலகக் கோப்பை தொடரை நடத்தியது. அனைவருக்கும் நன்றி ‘’ என்று கூறியுள்ளார்.