
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதாக வதந்திகள் பரவிய நிலையில் தேமுதிக தலைமை கழகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தேமுதிக விஜயகாந்த் உடல் நிலை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
‘’விஜயகாந்திடம் தொடர்ந்து இருமல் பாதிப்பு இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் விஜயகாந்த் உடல் நிலை சீராகவே உள்ளது.
அவருக்கு ஏற்கனவே சிறு நீரக மாற்று அறுசைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.