
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கார்த்தியின் 25 வது படமாக சமீபத்தில் தீபாவளிக்கு வெளியானது ‘ஜப்பான்’.
இப்படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்திருந்தார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.
இப்படம் கடந்த தீபாவளிக்கு ரிலீஸாகி 9 வது நாளில் ரூ.32 கோடி வசூலீட்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதுகுறித்து புளூசட்டை மாறன் தன் வலைதள பக்கத்தில்,
‘’ஜப்பான் அட்டர் ஃப்ளாப்.
ஜிகர்தண்டா 2..மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் ஓரளவு வசூலை ஈட்டி ஜப்பான் வசூலை தாண்டியது என்பது மட்டுமே உண்மை.
நகரங்கள் அல்லாத பகுதிகளின் பல சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் ஜிகர்தண்டா 2 எடுபடவில்லை.
பெரிய வெற்றி பெற்றுவிட்டது போல ஒரு மாயையை உருவாக்கி.. எத்தனை சக்ஸஸ் மீட், பேட்டிகள், விளம்பரம் செய்தாலும்.. உண்மை இதுதான்.’’என்று தெரிவித்துள்ளார்.