
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய கால குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் வெகுபுத்திசாலிகளாகவும், திறமையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வெளி நாட்டில் ஒரு பள்ளி வாகனத்தில் சில மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அந்த ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இருக்கையில் சாய்ந்தார். இதை கவனித்த ஒரு மாணவன் உடனே வந்து, ஓட்டுனரின் மார்பை தொட்டு முதலிதவி செய்யத் தொடங்கினார்.
அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடுவதை கவனித்த 13 வயது மாணவன் ஒருவர் உடனே நிலையமை கவனத்தில் கொண்டு சமயோஜிதமாகச் செயல்பட்டு, அப்பேருந்தை நிறுத்தினார்.
இதனால் அப்பேருந்திற்குள் பயணித்த அனைத்து மாணவர்களின் உயிரும் காப்பாற்றப்பட்டது. அந்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த காட்சிகள் அப்பேருந்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.