
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ”எந்த ஊடகமும் முன்பு அவர் பேசினாரோ, அதே ஊடகம் முன்பு உண்மை மனதுடன் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட வேண்டுகிறோம்’’ என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு திரிஷா, சின்மயி உள்ளிட்டோர் நடிகரிகள், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளதாவது:
‘’மூத்த நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா உள்ளிட்ட நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
சக நடிகர்கள் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானைன தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராகப் பொறுப்புணர்ந்து அவர் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கையில், தான் உதிர்க்கின்ற கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உணர்வின்றி அவர் பேசியது தவறாகும்.
எந்த ஊடகமும் முன்பு அவர் பேசினாரோ, அதே ஊடகம் முன்பு உண்மை மனதுடன் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட வேண்டுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.