
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 நடந்து வருகிறது.
இன்று உலகமே எதிர்பார்த்திருந்த இந்தியா- ஆஸ்தியரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி குஜராத் – அகமதபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் ரோஹித் சர்மா 47 ரன்னும், கில் 4 ரன்னும், , ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடன் அவுட்டாகினர். ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ள கிங் விராட் கோலி34 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்னுடன் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் , மேக்ஸ்வெல், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
இன்றைய பரபரப்பான ஆட்டத்தில் இந்திய ஸ்கோர் உயர கோலி கைகொடுப்பார் என தெரிகிறது.