
மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘இனியும் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன். இவரைப் போன்றவர்கள் மனிதகுலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள் ‘என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான லியோ படத்திலும் மன்சூர் அலிகான் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை திரிஷா எக்ஸ் தளத்தில்,
”நடிகர் மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியஒவை பார்த்தேன். பாலியல் ரீதியாகவும், மரியாதைகுறைவாக மற்றும் கேவலமான எண்ணத்துடன் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படலாம். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நான் நிம்மதியடைகிறேன். இனியும் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன். இவரைப் போன்றவர்கள் மனிதகுலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் ஆபாச பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் சக நடிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்,
‘’சுய விளம்பரத்திற்காக இதுபோன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரிஷா குறித்து இழிவாக பேசுய மன்சூர் அலிகான் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.