
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 நடந்து வருகிறது.
இன்று உலகமே எதிர்பார்த்திருந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி குஜராத் – அகமதபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இப்போட்டியை காண முன்னாள் வீரர்களுக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டியைக் காண பிசிசிஐ எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் இந்திய அணி கேப்டனும் கடந்த 1983 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்திய அணி உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டனுமான கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘’எனக்கு அழைப்பு விடுக்காததால் இப்போட்டியை காண செல்லவில்லை’’ எனவும் ’’ 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய வீரர்கள் அனைவரும் அங்கு இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். வேலைகளுக்கு மத்தியில் எங்களை மறந்துவிட்டார்கள் போல’’ என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.