
விளையாட்டை விளையாட்டதாகத்தான் பார்க்க வேண்டும் என்பர். ஆனால், கிரிக்கெட் பொறுத்தவரை இந்தியர்களுக்கு அது உணர்ச்சியைத்தாண்டி, உணர்வைத் தொடுகிற ஒன்று.
அதனால், இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மாதிரி ஒவ்வொரு அணியுடன் இந்தியா மோதும் போது, கடைகோடி தொழிலதிபர் முதல் பிரமாண்ட கோடீஸ்வர்கள் வரை எல்லோரது ரத்தத்திலும் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
அதனாதால் கடந்த 10 போட்டியிலும் இந்தியா கை ஓங்கியபோது புள்ளிப்பட்டியலில் டாப்பில் நின்றபோது கைதட்டி, அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்தியா ஜாம்பாவாக நிகழ்கிறது என்று நினைத்து வந்தோம்.

ஆனால், உலகக் கோப்பை தொடரின் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இன்றைய இறுதிப் போட்டியில் தொடர் வெற்றிக் கதையின் டிவிஸ்ட் மாதிரி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து, ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒரு விளையாட்டில் திட்டமிட்டு, அதற்காக கடுமையாக உழைத்து, கூட்டுமுயற்சியுடன் செயல்பட்டால் நிச்சயமாக வெற்றிபெறலாம் என்பதை இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அழகாக கற்றுக் கொடுத்தது.
சொந்த மண்ணில் எத்தனையோ முறை இதே மைதானத்தில் விளையாடிய அனுபவனும், இதே உலகக் கோப்பையில் இதற்கு முந்தைய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பலத்துடனும் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினாலும், இன்று பேட்டிங்கிலும், பவுலிங்கிலும், பீல்டிங்கிலும் கத்துக்குட்டி அணி மாதிரி சொதப்பினர்.
இதை ஆஸ்திரேலியா தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் அசத்தியது..
தொட்ட பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருந்து அடுத்தடுத்து சொற்ப ரன்களுடன் அவுட்டான பிறகும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி நிதானம் காட்டாமல் அவுட்டாகினர்.

விராட் கோலி(54 ரங்கள்), கே.எல்.ராகுல்(66 ரன்கள்) , ரோஹித் சர்மா(47 ரன்கள்) தங்கள் பங்குக்கு ரன்கள் அடிக்கவில்லை என்றால் இன்றைய போட்டி இறுதிப்போட்டி மாதிரி இருந்திருக்காது. இரண்டாவது இன்னிங்ஸின்போது 40 ஓவர்கள் வரையிலும் தாக்குப்பிடித்திருக்காது.
ஆனால், ஆஸ்திரேலியா வீரர்களிடம் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, வேற்று தேச மண்ணில் வெற்றிக்கொடி பறக்கவிட வேண்டுமென்ற தணியாக தாகம் அவர்களுக்குள் இருந்ததை இன்றைய போட்டியில் பார்க்க முடிந்தது.
பந்துவீச்சில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட் எடுத்ததுடம் இறுதிவரை இந்திய அணியினரை ரன்கள் அடிக்கவிடாமல் தடுப்பதிலும், ஸ்கோர் உயராமல் பார்த்துக் கொண்டது கூட இன்றைய வெற்றிக்கு முழு காரணம்.
இந்திய அணியினர் மாதிரி ஆஸ்திரேலியா அணியினர் ஸ்மித், வார்னர், மிச்செல் மார்சஷ் விக்கெட்டுகள் பறிகொடுத்த பின்னும் பதற்றமடையவில்லை. அப்போது கூட வெற்றி இந்தியாவுக்குச் சாதகமாகத்தான் இருந்தது.
ஆனால், ஹெட் மற்றும் லேபஸின் நீடிய பொறுமை மற்றும் நிதானமான ஆட்டம் ஒரு அணியை எந்த இக்கட்டில் இருந்தாலும் இம்மாதிரி ஒரு பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சவாலை கடந்து சரித்திரம் படைக்க முடியும் என்பதை அடிக்கோடிட்டு காட்டியது.
எனவே டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், லேபஸ் 58 ரன்களும் அடித்து, இருவரும் கூட்டாக 195 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியின்போது, ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை மளமளவென இழந்து தடுமாறியபோது, மலைபோல் நின்று மீட்ட மேக்ஸ்வெல் மாதிரி இன்று இருவரும் அணிக்கு துணையிருந்தனர். வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
உலகமே எதிர்பார்த்த இன்றைய போட்டியில் இந்தியாதான் ஜெயிக்கும் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், ஆட்டத்தின்போக்கை ஆஸ்திரேலியா வீரர்கள் மாற்றியமைத்தனர். கட்டுக்கோப்பான திட்டமிட்டல், அதை செயல்படுத்திய முறை, போட்டியின் மீது கவனம் இதெல்லாம் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவரிடமும் காணமுடிந்தது.
இந்திய வீரர்கள் அலட்சியமாக இருந்தனரோ என ரசிகர்களை நினைக்க வைத்தது. ஆனால் இந்தியர்களை அமைதியாக்கியது ஆஸ்திரேலியர்கள் இன்றைய சிறந்த ஆட்டம்.
ஒருவேளை இந்தியா 300 ரன்களுக்கு மேல் அடித்திருந்தாலும் அதையும் அவர்களால் சேஸிங் செய்திருக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்தனர்.
பாண்டிங் கேப்டன்ஸியில் இருந்த அதே விறுவிறுப்பும், விடாமுயற்சியும் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்களிடம் காண முடிந்தது.
பலமிக்க இந்திய அணியை இன்னொரு பலமிக்க ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணியில் வீழ்த்தியுள்ளது.
யாராலும் வெல்ல முடியாது என்பது ஒரு பெருமையல்ல. எல்லா காலத்திலும் வெல்லும் மன நிலையும், அதற்கான போராட்ட களத்தில் தன்னை தகுதிப்படுத்தலும்கூட வெற்றிக்கு முக்கியத்தேவை என்பதை இப்போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்களின் போராட்டம் உணர்த்தியது.
240என்ற இலக்கு உண்மையில் பெரியதுதான். ஆனால், இந்தியா என்ற இமயத்தைப் பொறுத்தவரை இதற்கு முன்னர் அடித்த ஸ்கோரை விட இது குறைவு என்பதுதான் எல்லோருடைய ஒப்பீடும்.
இதையே முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்தியாவை முதலில் ஆடவிட்டு, பின்னர், அது எப்படியும் சமாளிக்கும் எண்ணத்துடன் களமிறங்கி சாதித்தும் விட்டது.
இளம் வீரர்கள் கில் , பந்துவீச்சாளர்களும் பேட்டிங்கில் சொதப்பியது. இந்தியா இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை காட்டியது. அதேசமயம், ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜாவின் பந்துகள் சிம்பசொப்பனமாக களத்தில் நின்று அடித்த
ஹெட், லாபெஸிடன் எடுபடாதபோது, அவர்களின் தந்திரம் என்று நினைத்து வீசிய பவுலிங்கில் விக்கெட் விழாதபோது,ரசிகர்களே கூட மாற்று பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியிருக்கலாம், அஸ்வின், யாதவ் போன்றோரை அணியில் எடுத்திருக்கலாம்..கடைசிக்கு கோலி, ரோஹித்தையாவது பந்து வீச வைத்திருக்கலாமோ என நினைத்தனர்.

இதை ஏன் தேர்வுக்குழு யோசிக்கவில்லை என தெரியவில்லை. மூத்த வீரர்கள் என்றால் விராட் மற்றும் ரோஹித் சர்மாதான். மற்றவர்கள் எல்லாம் இளம் வீரர்கள். இவர்களைக் கொண்டு இத்தனை தூரம் வந்தது பாராட்டத்தக்கது. ஆனால்,
எல்லைக்கோட்டை தொட்டால் வெற்றி என்ற நிலையில் அதை தொடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி இறுதிப் போட்டியில் கோட்டைவிட்ட இந்திய அணிக்கு இதுவொரு தக்க பாடம்தான்.
இந்திய அணியின் கடந்த 10 தொடர் வெற்றிகளை இந்த ஓரே தோல்வி வந்து ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதோ என தோன்ற வைக்கிறது.
அதேசமயம் 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் மற்றும் 42 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் ஒரு சில மூத்த வீரர்களைக் கொண்டு இங்கம் இளம்வீரர்களைக் கொண்டு வெற்றி பெற்று சாம்பியன் ஆன கங்காரு வீரர்களுக்கு வாழ்த்துகள்.

இந்திய ரசிகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் அழுது, குட்டிகரணம் அடித்து, சோகப் பவுடரை முகத்தில் அரிதாரம் பூசிக்கொள்வதால் ஒரு பயனுமில்லை.
இந்திய வீரர்கள் கூட்டுமனப்பான்மையுடன் செயல்பட ஒத்திசைய வேண்டும். அதுதான் அடுத்துவரும் போட்டியில் இன்னும் 4 ஆண்டுகள் கழித்து வரும் உலகக் கோப்பையில் பட்டம் வெல்ல ஒரு பயிற்சியாக இருக்கும்.
இந்தியாவின் ஒவ்வொரு சொதப்பலும், ஆஸ்திரேலியாவின் அசத்தல் வெற்றிக்கு போன்கா அமைந்ததுபோலும்.
#சீவகன்