
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர், இன்று தன் 39 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பின்னர், சந்திரமுகி சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன், பில்லா, குசேலன், ஆதவன், தனி ஒருவன், ஆரம்பம்,பிகில், ஓ2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
இவரது 75 வது படமான அன்னப்பூரணி படத்தின் முதல் சிங்கில் நயன்தாரா பிறந்த நாளையொட்டி இன்று ரிலீஸாகிறது.
நயன்தாரா தன் பிறந்த நாளையொட்டி தன் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரு குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடினார். இதுகுறித்த கியூட் வீடியோ வைரலாகி வருகிறது.