
பிரபல நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் விஜயசாந்தி. தலைவாசல் என்ற படத்தில் அறிமுகமான அவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகள் இன்ப்றுள்ள சிரஞ்சீவி, ரஜினிகாந்த், உள்ளிட்ட பிரபல சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
சினிமாவில் பிரபலமான இருந்தபோதே கடந்த 1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்த நிலையில் சினிமாவிலிருந்து விலகி அவர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சார்பில் போட்டியிட்டு, 2009 ஆம் ஆண்டு மெதக் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகத் தேர்வானார்.
அதன் பின்னர், தெலங்கானா மாநிலம் தனியாக உருவான பிறகு அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் அவருக்கு அதிருப்தி நிலவுவதாகக் கூறி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.3
அவரது வருகை காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பரப்புரைக்கும் அக்கட்சியின் வாக்கு சேகரிப்பிற்கும் கூடுதல் பலமாக அமையும் என கூறப்படுகிறது.
இவர் 80 களில் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.