
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இவர் நேற்று தன் பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகள் கூறினர். இந்த நிலையில் அவர் தன் வலைதள பக்கத்தில் ”பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும்,என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான்” என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:
”பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும்,என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான்….
கேட்கும் மாத்திரத்தில் புரியாது….
புதிய பாதைக்கு முன் நாகரீகமாக யாசகமே பலரிடம் கேட்டிருக்கிறேன்.அதன் பின் அருள் பாவிக்கும் ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் நான் யாரிடமும் எனக்காக எதையும் கேட்பதில்லை.ஆனால் மற்றவர்களுக்காக நிறைய கேட்டிருக்கிறேன். அப்படி மலையாள ‘ப்ரேமம்’ செய்த இயக்குனர்
mr Alphones puthran கமல் சார் பிறந்த நாளுக்கு பரிசாக பாடல் தொகுப்பு ஒன்றை தன் குரலில் பதிவு செய்து எனக்கனுப்பி “எல்லா வழியிலும் முயற்சித்து விட்டேன்,நீங்கள் அவரிடம் சேர்ப்பிக்க இயலுமா?”
அவருக்குதவ கமல் சாரை அணுகினேன். அதற்களித்த பதிலது.வரிசை கட்டிக்கொண்டு படங்கள்,சொந்தப. பட வேளைகள்,big boss, அரசியல் பணிகள், இப்படி….
இப்படி அப்படி நகர முடியா நெருக்கடியான சூழ்நிலையிலும் தன் குரல் மூலம் ஒரு கலைஞருக்கு தெம்பு டானிக் அதுவும் துரிதமாக அனுப்பியவருக்கு வார்த்தைகள் அற்ற மவுனத்தை ( நேற்றானதால்) மனப்பூர்வமாக பகிர்ந்தேன். அதை கேட்டு பெட்டி பெட்டியாக இயக்குனர் எனக்கு நன்றி அனுப்பினார். உடல் நலம் காரணமாக மனநலமும் குன்றியுள்ள ஒருவருக்கு ஒரு சொட்டு மருந்தாக நான் பயன்பட்டதால் வாழ்வின் ஒரு துளி அர்த்தப்பட்டது.இதைச் சொல்லக் காரணம் out of the way போய் கூட,அடுத்தவரின் புன்னகைக்கு காரணமாகலாம்” என்று தெரிவித்துள்ளார்.