
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜப்பான். இப்படம் இவரது 25 வது படமாகும்.
இப்படத்தை ராஜூ முருகன் இயக்கியிருந்தார். இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்ப்ட்ட நிலையில் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. நடிகர்கள் தங்களின் 25 வது படத்தை பார்த்து பார்த்து தேர்வு செய்வார்கள்? கார்த்து எப்படி இப்படத்தின் கதையை தேர்வு செய்து அதில் நடித்தார் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கார்த்தி அடுத்த படத்தை ஹிட் கொடுக்கும் முனைப்பில் உள்ளார்.எனவே அவர் அடுத்த படத்தை சூதுகவ்வும் பட இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கவுள்ளார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இவரது 27 படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மென்ட் தயாரிக்கவுள்ள இபப்டத்தில் ஹீரோயின் இல்லை என தகவல் வெளியாகிறது. இதுவரை ஹீரோயின் இல்லாத படத்தில் கார்த்தி நடித்ததில்லை என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.