
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்தியாவின் ரோகித் சர்மா 47 ரன்னும், கோலி 117 ரன்னும், சுப்மன் கில் 80 ரன்னும், ஸரேயாஷ் அய்யர் 105 ரன்னும் அடித்தனர்.

எனவே இந்திய அணி 50 ஓவர்களில் நான்கு கட்டுகளை இழந்து 397 ரன்கள் எடுத்தது.
இப்போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி தனது 50 வது சதத்தை பதிவுசெய்ததுடன், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முயறிடித்துள்ளார்.
இதற்கு கோலிக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இப்படி எத்தனை பாராட்டுகள் குவிந்தாலும் சச்சின் என்ன கூறுகிறார் என்பதைக் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது.

இதுகுறித்து அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ”முதன் முதலில் நான் உங்களை சந்தித்தபோது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி,கிண்டல் செய்தனர். அன்றைக்கு என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. விரைவில் உங்கள் ஆர்வ, திறமையால் என்னை கவர்ந்து என் இதயம் நுழைந்தீர்கள். அந்த சிறுவன் விராட் விரியராக் இன்று வளர்த்தில் எனக்கு மகிழ்ச்சிதான்.

மேலும், ஒரு இந்திய எனது சாதனையை முறியடித்ததைவிட நான் மகிழ்ச்சியடைய வேறெதுவுமில்லை. இந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் எனது சொந்த மைதானத்தில் இந்த சாதனை படைத்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது ”என்று தெரிவித்துள்ளார்.
சச்சின் பெருந்தன்மையுள்ளவர் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.