
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் ஜிதர்தண்டா வெளியான படம் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, இளவரசு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை ரஜினிகாந்த் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
இக்கடித்ததுடன், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படங்களும் வைரலானது. இதற்கு ஜிகர்தண்டா 2 படக்குழுவினரும் வாழ்த்துகள் கூறினர்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி, எழுதிய கடிதத்தில் எஸ்.ஜே.சூர்யாவை இ ந் நாள் நடிகவேல் என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இதற்கு நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்குப் போட்டி போடுவதாக இணையதளத்தில் தகவல் வெளியானதற்கு ரஜினி ரசிகர்கள் கோபமடைந்தனர்.

சினிமா துறையினரும் ஒரே சூப்பர் ஸ்டார் தான் என்றனர். ஆனால், ரத்தக்கண்ணீர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் அசத்தல் நடிப்பை வெளியிட்டு ஆயிரக்கணக்கான நாடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் பட்டத்தை எப்படி ரஜினி எஸ்.ஜே.சூர்யாவுக்கு கொடுக்கலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.