
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர், நடிப்பில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து, சிவராஜ்குமார், நிவேதிதா சதீஸ், பிரியங்கா மோகன், வி நாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
.இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படம் வரும் பொங்கலுக்கு அயலான் மற்றும் லால் சலாம் படத்துடன் மோதுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் தன் டிவிட்டர் பக்கத்தில், அவர் நடிகர் தனுஷ், அருண்மாதேஷ்வரனுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ”இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் புழுதிக்கெல்லாம் விருந்து படைக்கும் .. நாந்தாண்டா நீதி நாந்தாண்டா நீதி என்ற பாடலின் வரிகளை பதிவிட்டு, கேப்டன் மில்லர் கேப்டன் மில்லர் என்று கூறி இப்பாடலை பாடியவர் தனுஷ்” என்று பதிவிட்டுள்ளார்.
இது வைரலாகி வருகிறது.