
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை நமீதா. இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் உருவான ஏய் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
அதன்பின்னர், இங்கிலீஸ்காரன், சாணக்யா, யானை, கோவை பிரதர்ஸ்,பில்லா, இளைஞன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா. கட்சிகள் சேர்ந்து 8 மாதங்களுக்குப் பிறகு நமீதாவுக்கு மா நில செயற்குழு உறுப்பினாராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பணமோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் இரும்பு தொழிற்சாலை நடத்தி வரும் நிலையில், அங்குள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் அளித்துள்ளார்.
அதில், உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் சிறுகுறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் ஆல் இந்தியா தலைவர் எனக் கூறியதாகவும், அந்த அமைப்பின் தமிழக சேர்மன் பதவி தருவதாக கூறி ரூ.3.50 கோடி கேட்டதால் தான் ரூ.50 லட்சம் அவருக்கு கொடுத்ததாகவும் ஆனால், பணத்தை வாங்கிக் தனக்குப் பதவி கொடுக்கவில்லலை என தெரிவித்துள்ளர்.

மேலும், கொடுத்தபணத்தைக் திருப்பிக் கேட்டதற்கு, நமீதாவின் கணவர் சவுத்ரியிடம் ரூ.4 கோடி பெற்று பதவியை கொடுத்ததாக கூறினார். எனவே அப்பதவிக்கு நான் கொடுத்த பணத்தில் ரூ.9 லட்சம் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதி ரூ.40 லட்சம் தராமல் ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த MSME மோசடி புகாரில் வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் மாவட்ட காவல்துறை ,நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகபிரிவு தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.