
‘டைகர் 3’ பட ரிலீஸின்போது, தியேட்டருக்குள் பட்டாசு வெடித்தது தொடர்பாக மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் – கத்ரினா கைப் நடிப்பில் தீபாவளியையொட்டி கடந்த 12 ஆம் தேதி வெளியான படம் டைகர் 3.
இப்படத்தை மணீஷ் ஷர்மா இயக்கியுள்ளார். பிரிதம்: தனுஷ் டிகு இசையமைத்துள்ளார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் ரிலீஸின்போது ரசிகர்கள் தியேட்டருக்குள் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இதற்குக் கண்டனம் குவிந்தது.

இதுகுறித்து சல்மான் கான் ‘’திரையரங்கின் உள்ளே பட்டாசுகளை வெடிஉப்பது ஆபத்தானது. இது எல்லோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. தியேட்டரில் படத்தைப் பார்க்கும்போது நமக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்ததா வகையில் படத்தை ரசிக்க வேண்டும்’’ என ரசிகர்களுக்கு சல்மான் கான் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தியேட்டரில் பட்டாசு வெடித்தது தொடர்பாக மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.