.
உரிய அனும்தியின்றி சல்மான நடிப்பில் வெளியான டைகர் 3 படத்தை 6 காட்சிகள் திரையிடப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், திருப்பூரில் உள்ள ஸ்ரீசக்தி தியேட்டரில் தீபாவளியன்று அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் வெளியிட்ட சக்தி தியேட்டருக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
இதுகுறித்து புளூசட்டை மாறன் வலைதள பக்கத்தில்,
‘’பலமுறை செய்தி சேனல் மற்றும் யூட்யூப் பேட்டிகளில் இவர் சொன்னது:
எங்கள் தியேட்டரில் அரசாங்கம் நிர்ணயித்த டிக்கட் ரேட் மட்டுமே வாங்குகிறோம். அரசு அனுமதியின்றி சிறப்புக்காட்சிகளை திரையிட மாட்டோம்.
இத்தனைக்கும் இவர் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவராம்.
தகுந்த நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. இத்திரையரங்கை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
வடக்கத்தி தொழிலாளிகள் திருப்பூரில் அதிகம் வசிப்பதால் அவர்களுக்காக அதிகாலை மற்றும் நள்ளிரவுக்காட்சிகள் அரசின் அனுமதியின்றி போடப்படுவதாக அவ்வப்போது கூறப்பட்டு வருகிறது.
9 AM முதல் நள்ளிரவு 1.30 மணிவரை மட்டுமே சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என்பது தற்போதைய அரசாணை.
ஆகவே இந்த உத்தரவை மீறி செயல்படும் ஆன்லைன் புக்கிங் நிறுவனங்களான bookmyshow, Ticketnew போன்றவற்றையும் எச்சரிக்க வேண்டும்.
அனுமதி நேரத்திற்கு முன்போ, பின்போ ஷோ டைமை இந்த தளங்களில்.. தியேட்டர்கள் ஆன்லைன் புக்கிங் போடுமாறு கூறினால்.. அதற்கான அரசாணையின்றி இந்த தளங்கள் புக்கிங்கை ஓப்பன் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
தமிழர்களே காலை 9 மணிக்கு பிறகுதான் படம் பார்க்க வேண்டும் எனும் நிலை உள்ளபோது.. வடநாட்டவர்களுக்கு காலை 7 மணி ஷோ போடுவது நியாயமில்லை.
அடுத்து வரவுள்ள Salaar, Dunki போன்ற படங்களை இந்த தியேட்டர் எத்தனை மணிக்கு திரையிடுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும்.
சங்கத்தலைமையே இப்படி இருந்தால் சரியா? இதை கேள்வி கேட்கவோ, சங்கம் சார்பாக நடவடிக்கை எடுக்கவோ யாருக்கும் துணிச்சல் இல்லையா?
இனி நீங்கள் நீதி, நேர்மை என பேட்டி தந்தால் அதை மக்கள் மதிப்பார்களா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சங்கத்தலைமையே இப்படி இருந்தால் சரியா? புளூ சட்டை மாறன் கேள்வி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment