
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் லியோ. இப்படத்தின் வெற்றி விழா முடிந்த பின் விஜய்68 படத்தின் ஷூட்டிற்ங்காக தாய்லாந்து சென்றார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஆரம்பமாகி, முதற்கட்ட ஷூட்டிங்க் பாங்காங்கில் நடைபெற்ற நிலையில், அதில் நடித்து முடிந்த பின், விஜய் நேற்று பாங்காக்கிலிருந்து சென்னை திரும்பினார்.

பாங்காக்கில் பக்காவான ஆக்சன் கார் சேஸிங் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சென்னை விமான நிலையத்தில் கையில் பாஸ்போர்டுடன் நடந்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
Seevagan