
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் டைகர் 3 என்ற திரைப்படம் தீபாவளியையொட்டி ரிலீஸாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்த்த தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசுகள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் விஜய்யின் லியோ படத்தின் டிரைலர் ரிலீஸின்போது, அது சில தியேட்டர்களில் எக்ஸ்கிளூசிவாக சிலவர் ஸ்கீரினில் ஒளிபரப்பானது.
இதனால் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்னை ரோகிணி உள்ளிட தியேட்டர்களுக்கு படையெடுத்து விஜய்யின் லியோ டிரைலரை கண்டு களித்தனர்.
டிரையிலரை மட்டும் பார்த்தால் பரவாயில்லை; ஆனால், ஆர்வக் கோளாறில் ரோகிணி தியேட்டரின் இருக்கைகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்து, அதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் ரசிகர்கள் மீது விமர்சனம் செய்தனர்.
இதனால் சென்னை ரோகிணி தியேட்டருக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அவர்கள் புகார் எதுவும் கொடுக்கவில்லை. அந்த செலவை அவர்களே ஏற்றுக்கொண்டு புதிய இருக்கைகளை அமைத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் டைகர் 3 என்ற திரைப்படம் தீபாவளியையொட்டி ரிலீஸாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்த்த தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசுகள் வெடித்து, தீபாவளி கொண்டாடியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ பரவியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
இது எந்த தியேட்டர் எந்த இடம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Seevagan