
தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகையொட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கிறார். அவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் தான்.
அந்தவகையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், மோகன்லால் (மலையாளம்), சிவராஜ்குமார்(கன்னடம்), மற்றும் ரம்யாகிருஷ்ணன், ரவி வசந்த், விநாயகம் ஆகியோர் நடிப்பில், அனிருத்தின் ராக் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட்டானது.
இப்படத்தை அடுத்து, த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தலைவர்170’ . இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அர்ஜூன், அமிதாப் பச்சன், பகத்பாசில் ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் ‘’அயலான் ஆகிய படங்களுக்குப் போட்டியாக ரிலீஸாகிறது.

இந்த நிலையில், லைகா நிறுவனம் அறிவித்தபடி, இன்று லால் சலாம் படத்தின் டிரைலர் டீசர் ரிலீஸாகியுள்ளது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தி தீபாவளி பண்டிகையொட்டி தன் ரசிகர்களுக்கு வாழ்த்துகள் கூறி, வரும் பொங்களுக்கு’ லால் சலாம்’ படத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இப்படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Lal Salaam Tailor
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/7tQPxLKsSgg?si=vmxgRH89B50c8Tno" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen></iframe>