
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் பிஸா. இப்படத்தை அடுத்து, ஜிதர்தண்டா, பேட்ட, மகான், ஜகமே தந்திரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் ஜிதர்தண்டா வெளியான படம் வெளியானது.
இதனைத்தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, இளவரசு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. அரசு இப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இப்படம் கார்த்தியின் ஜப்பான் படத்திற்குப் போட்டியாக வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ள நிலையில், இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தன் வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
இதையடுத்து, இயக்குனர் ஷங்கர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்புரராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இயக்குனர் நெல்சன், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு, இப்பட கன்டெண்ட் புதிதாக இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜையும், இப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, ராகாவ லாரன்ஸ் சிறப்பக நடித்திருப்பதாகவும், சந்தோஷ் நாராயணன் சிறப்பான இசையமைத்திருப்பதாகவும் கூறி பாராட்டியுள்ளார்.
மேலும் ஜிகர்தண்டா 2 படத்தின் முதல் மற்றும் 2 வது ஆஃப் பிரம்மாதமாக அமைந்துள்ளதாகவும், இது தமிழ் சினிமாவின் சிறந்த படம் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Seevagan