
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியான படம் லியோ.
விஜய்யுடன் இணைந்து திரிஷா, மிஸ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மடோனா செபஸ்டின், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்திருந்தார்.
இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்தது.
அதன்பின்னர் ஒருவாரத்தில் ரூ.461 கோடி வசூலானதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
பின்னர், 12 நாட்களில் இப்படம் ரூ.540 கோடி வசூலானதாக கூறிய நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதனையடுத்து, 21 நாட்களில் ரூ.600 கோடியும் வசூலித்தது. இந்த வசூல் வேட்டையில், ரஜினியின் 2.0 திரைப்படம் ரூ.700 கோடி வசூலுடன் முதலிடத்திலும், ஜெயிலர் ரூ.650 கோடி வசூலுடன் 2 வது இடத்திலும், விஜய்யின் லியோ 3 வது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ பட 25 நாள் வசூல் என்ன என்பதை படக்குழு வெளியிட்டால் ரஜினியின் வசூல் ரெக்கார்டை விஜய் முந்தினாரா என்பது தெரியவரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 வது நாளை நிறைவு செய்கிறது.
இதுகுறித்து படக்குழு ‘இண்டஸ்டிரி பிளாக்பஸ்டர் பாத்தாச்சு மா’ என்று குறிப்பிட்டு, புதிய போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளது.
Seevagan